தொண்டாமுத்தூர் பகுதியில் மண் கொள்ளை ஜோர், கண்டு கொள்ளாத மாவட்ட நிர்வாகம்,
- Siva Apt
- Mar 17, 2021
- 1 min read
கோவை மாவட்டம், அமைச்சர் வேலுமணியின் தொகுதியான தொண்டமுத்துரில் மண் கொள்ளை படு ஜோராக நடந்து வருகிறது.
கோவை மாவட்டம் பேரூர் வட்டம் ஆலாந்துரை கிராமம், காளியமங்கலம் மலைப்பகுதி , யானைகள் நடமாட்டம் மிக அதிகமுள்ள பகுதியாகும் இப்பகுதியில் எந்த வித அனுமதியுமில்லாமல், இரவு பகலாக மண் கொள்ளை நடந்து வருகிறது. தேர்தல் நேரத்திலும் பேரூர் வட்டத்திற்குட்பட்ட, நரசிபுரம், பூலுவபட்டி, மத்வராயபுரம், வீராலியூர், தாளீயூர், உள்ளிட்ட மலையடிவார பகுதிகளில் மண் கொள்ளை இரவு பகலாக நடந்து வருகிறது. இந்த சட்ட விரோத செயல்களில் ஈடுபடுபவர்கள் அ.தி.மு.கவினர் என்பதால் அதிகாரிகளும் நடவடிக்கை எடுக்காமல் இருந்து வருகின்றனர். தேர்தல் ஆணையத்தின் கட்டுப்பாட்டில் இருக்கும் போது கூட ஆளுங்கட்சியனரை பார்த்து பயப்படுவது சமூக ஆர்வலர்கள் மத்தியில் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது. ஏற்கனவே உயர் நீதி மன்ற வழக்கு இருந்தும் இந்த மண் கொள்ளை மலையிடப்பகுதிகளில் நடந்து வருகிறது கோவை மாவட்ட ஆட்சியர் என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறார் என்பது இனிதான் தெரியும். இதற்கிடையில் நாங்கள் விவசாய நிலத்தை சமன்படுத்துகிறோம் என ஒருவர கூறினார். ஆனால் விசாரித்த வகையில் அவர் மண் அள்ளுவதை தொழிலாக செய்து வருகிறார் என்பதை அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

Commenti