விவசாயிகளின் சவக்கிடங்காக மாற போகிறதா டெல்லி?
- Siva Apt
- Jan 19, 2021
- 1 min read
ஏரத்தாழ நாம் சர்வாதிகார்த்தின் பக்கத்தில் போய்விட்டோம் என்பதுதான் உன்மை நாட்டீன் நீதித்துறை செயல்பாடுகள் கவலையளிப்பதாக உள்ளது.

இன்று உச்ச நீதிமன்றம் டெல்லியில் போராடிவரும் விவசாயிகள் மீது எந்த விதமானநடவடிக்கையும் நீங்கள் எடுக்கலாம் என மறைமுகமாக மத்திய மோடி அரசாங்கத்திற்கு பச்சை கொடி காட்டியுள்ளது. ஒரு சார்வாதிகார அரசால் மட்டுமே இத்தனை பெரிய போராட்டத்தை பார்த்து ஏளனம் செய்ய முடியும். உன்மையில் ப.ஜ.க என்ற கட்சிக்கு எந்த எதிர்ப்பும் இல்லை என்பது போன்ற ஒரு போலி பிம்பத்தை ஊடகங்கள் வாயிலாக உருவாக்கியதன் பலனை அறுவடை செய்கின்றனர்.
இனி உச்சநீதிமன்றம் சொல்லிவிட்டது நாங்கள் என்ன செய்வது என மாபெரும் அடக்குமுறையை கட்டவிழ்க்க மத்திய அரசாங்கம் ஆயத்தம் ஆகிறது என்பதுதான் இன்றைய சம்பவம் நமக்கு சொல்கிறது. ஏற்கனவே மெரீனா போராட்டத்தில் கல்வீச்சு குடிசை எரிப்பு ஆட்டோ எரிப்பு போன்ற சம்பங்களை செய்து கூட்டத்தை காவல்துறை கலைத்த விதம் ஜல்லிக்கட்டு போராட்டத்தில் பங்கேடுத்த அனைத்து இளைஞர்களுக்கும் தெரிந்த செய்திதான் அமைதியாக நடந்து வரும் டெல்லி விவசாயிகள் மீது கலவரக்காரர்கள் என்ற பலியை போடுவதற்கு இந்நேரம் அவர்கள் திட்டத்தை தீட்டியிருப்பார்கள்.
வரப்போகும் குடியரசு தினம் உண்மையில் மக்கள் குடியரசு தினமாக கொண்டாட போகிறோமா அல்லது அடக்குமுறையின் வடிவமாக இருக்குமா என்பதை வரும் நாட்கள் உணர்த்தும்..
Comments