நான் ஏன் உங்களை தலைவராக ஏற்றுக் கொள்ள வேண்டும்?
- Siva Apt
- Jan 18, 2021
- 2 min read
Updated: Jan 19, 2021
ஒரு அரசு அதிகாரியாக ஊதியத்தையும் அத்தனை விதமான சலுகைகளையும் பாதுகாப்புகளையும் பெற்றுக் கொண்டு உங்களுக்கு கொடுக்கப்பட்ட வேலையை நீங்கள் நேர்மையாக செய்வது ஒன்றே தகுதி என்றாகி விடுமா?

அரசாங்கத்தின் கடைநிலை அரசு ஊழியரை கொஞ்சம் அழுத்தி கேள்வி கேட்டால் கூட அரசு ஊழியரை பணி செய்யவிடாமல் தடுத்ததாக வழக்க்கு போடும் பாதுகாப்பு இருக்கிறது. நீங்களோ ஒரு IAS உங்கள் மீது ஒரு நேரடி தாக்குதல் நடந்தால் நிச்சமாக தாக்குதல் நடத்தியவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்படும். அப்படி ஒரு அரசியல் சாசன பாதுகாப்பை வைத்துக் கொண்டு நீங்கள் உங்கள் கடமையை செய்கிறீர்கள் அது ஒன்று மட்டுமே தலைவருக்கான தகுதியாவிடுமா? கேரளாவில் ஆயிரக்கணக்காண அதிகாரிகள் நேர்மையாகவே இருக்கிறார்கள் அவர்களை எல்லாம் அப்படியான தலைவர்களாக ஏற்றுக் கொள்ளலாமா ?
இந்த கேள்வியை ஒரு ஒன்றறை ஆண்டுகளுக்கு முன்னர் மக்கள் பாதை அலுவலகத்தில் நான் நேரில் சகாயம் அவர்களிடம் கேட்டது.அதற்கான பதிலை அவர் அப்போது கொடுக்கவில்லை. இனி அவர் கொடுப்பார் என்று எதிர்பார்க்கலாம். உண்மையில் இந்த கேள்வியை அவரிடம் கேட்டதற்கு எனக்கு வேறு ஒரு காரணங்களும் இல்லாமல் இல்லை தமிழ்நாட்டில் இன்றும் ஒவ்வோரு பகுதியிலும் எந்த விதமான அதிகாரமும் பாதுகாப்பும் இன்றி பல சமூக ஆர்வலர்களார்கள் தங்கள் பகுதி பிரட்சனைகளுக்காக போராடி கொண்டிருக்கிறார்கள்.
பல பொய்வழக்குகளிலும் சிறை சென்று வந்து கொண்டிருக்கிறார்கள். இதை நாம் நாள்தோறும் பார்க்கிறோம். உன்மையை சொல்லப்போனால் கடந்த 20 ஆண்டுகளாக தமிழ்நாட்டில் ஆக்கபூர்வமான எதிர்கட்சி என்ற ஒன்றே இல்லை என சொல்லலாம் அந்த பகுதிகளில் இருக்கும் சமூக செயற்பாட்டாளர்களின் கடும் முயற்சியில் பிரட்சனைகளை தீர்க்கும் முன்னெடுப்புகள் ஓரளவுக்கு வலுப் பெறும் போது அதில் அரசியல் கட்சிகள் இனைந்து பலன்களை அறுவடை செய்கின்றன. இதில் எந்த கட்சியும் விதி விலக்கல்ல எனும் அளவிற்குதான் உண்மை நிலை உள்ளது. களத்தில் போராட்டங்களையும் இழப்புகளையும் சந்திக்கும் போராட்ட காரர்களுக்கு கிடைக்காத ஊடக வெளிச்சம் இது போன்ற அதிகாரிகளுக்கு கிடைப்பது ஒரு வகையான செயற்கை அரசியல் வறட்சியை ஏற்படுத்தும் முயற்ச்சியே ஆகும்.
ஒருவன் தலைவனாக வெறும் மீடியா வெளிச்சம் மட்டுமே போதும் என்றநிலை மாற வேண்டும். நானநயமாக நடந்து கொள்வது ஒன்றே தலைவனுக்கான தகுதி என்றால் இன்றைய தினம் கோடிக்கணக்கான மக்கள் தனியார் நிறுவனங்கள் அது கார்பரேட்டாகவோ அல்லது சிறு நிறுவனமாகவோ இருந்தாலும் அவர்கள் பெறுகின்ற கூலிக்கு மேல் மிக நானயமாக வேலைபார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.அவர்கள் அனைவரும் தலைமைக்கு தகுதியானவர்களே. உன்மையான அரசியல் என்பது சமூகம் மற்றும் பொருளாதார நிலைகளின் பெரும் மாற்றத்தை கொடுக்க வல்லது உண்மையில் தமிழ்நாடு அரசியல் கருத்துக்களால் செழிப்பாகவே உள்ளது இங்கே தலைவர்கள் என்பவர்களை திணிக்க ஒரு கூட்டம் எபோதும் முயற்ச்சித்து கொண்டே இருக்கிறது அவர்கள் பல தலைவர்களை அவ்வப்போது முன்னிறுத்திக் கொண்டே இருக்கிறார்கள் அவ்வளவே. உன்மையான அரசியல் என்பது பாதுகாப்பு வளையங்களை தாண்டியது..
Comments